Happy 69th Birthday to Fr. Jesuthasan!
புனித பத்திமா அன்னையின் இறுதி திருக்காட்சி திருவிழா உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை யாத்திரைத்தலத்திலும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருக்காட்சி திருநாளிற்கான திரிதின வழிபாடுகள் இடம்பெற்று இன்று திருநாள் திருப்பலி யாழ் மேற்றாசன குருமுதல்வர் PJ. ஜெபரட்ணம் அடிகளாரால் கூட்டுத் திருப்பலியாக திருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு புனிதம் மிக்க பத்திமா அன்னையின் திருச்சுருப ஆசீரும் வழங்கப்பட்டது. திருப்பலி நிறைவில் பத்திமா நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட திருச்செபமாலை ஆலயத்திலுள்ள திருச்சுருப பகுதியில் குருமுதல்வரால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதோடு ஆலயத்தின் சூழலில் திருச்செபமாலை கடையும் திறந்துவைக்கப்பெற்றது. திருவிழா திருப்பலியில் முன்னைநாள் பரிபாலகர்கள்,அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் இறைமக்கள் பலரும் இணைந்திருந்தனர்.
திருவிழா ஏற்பாடுகளை இறைமக்களின் பங்களிப்போடு பங்கின் பரிபாலகர் அருட்பணி J A யேசுதாஸ் அடிகளார் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.
புனித பத்திமா அன்னை அனைவரையும் திருக்கரத்தினுள் காத்து வழிநடத்த வேண்டுவோம்.
Happy 69th Birthday Fr. Jesuthasan!
Dear Father Jesuthasan,
Wishing you a very happy and blessed 69th birthday.
May our Lord continue to guide your ministry,
fill your heart with peace, and grant you good health and joy in the year ahead.
Thank you for your faithful service and for the light you bring to so many lives.
With prayers and warm regards,
From St Anthony’s Parish families living outside Sri Lanka